திருமலை ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள 300ரூ விரைவு தரிசன டிக்கெட்டில் மீண்டும் ஊழல் நடைபெற்றது தெரிய வந்துள்ளது.
திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் 300ரூ விரைவு தரிசன டிக்கெட்டை நடைமுறைபடுத்தி உள்ளது. அங்கு கண்காணிப்புக்கேமரா ஆப்பரேட்டராக பணிபுரியும் திருப்பதியை சேர்ந்த சைதன்யா அதில் ஊழல் நடத்தியது தெரிய வந்தது. தேவஸ்தான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய சோதனையில் இது வெளிச்சத்திற்கு வந்தது.
பக்தர்களுக்கு அளித்த டிக்கெட்டுகளை மறுபடியும் ஸ்கேன் செய்து திருட்டுதனமாக அதே டிக்கெட்டை மீண்டும் மற்றவர்களுக்கு விற்று வந்துள்ளார். சோதனையின் போது ஒரு சில எண்கள் மட்டும் மீண்டும் மீண்டுóம் தோன்றவே அதிகாரிகள் முழு சோதனையில் ஈடுபட்டனர். பின் ஊழலில் ஈடுபட்ட சைதன்யாவை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வைகுண்டம் ஒன்றில் உள்ள தேவஸ்தான அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்ததுள்ளது. மேலும் இதே போல் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆந்திரா வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் 4 பேர் சுமார் 48 லட்சம் ரூபாய் வரை ஊழல் செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


